குடியரசு தின விழாவை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ரிப்பன் மாளிகை கட்டடத்தை பொது மக்கள் கண்டு ரசித்தனர். சென்னை மாநகராட்சியின் பிரதான கட்டடம், பச்சை, வெள்ளை, ஆரஞ்சு என மூவர்ணங்களால் ஜொலித்தது.