அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 30ம் தேதி தூத்துக்குடியில் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னெற்பாடு கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமைச்சர் கீதா ஜீவன், வரும் 30ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.