கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அருகே தனியார் சொகுசு ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் ட்ரீ லைட்டிங் திருவிழாவை நடிகர் சந்தானம் தொடங்கி வைத்தார். இதையடுத்து 70 அடி அளவிலான கிறிஸ்துமஸ் மரம் மின்விளக்குகளால் ஜொலித்தது. முன்னதாக கேரல்ஸ் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறினர்.