திருமங்கலம் அருகே கோயில் பிரச்சனையில் ஒரு தரப்புக்கு ஆதரவாக கோட்டாட்சியர் செயல்படுவதாக கண்டித்து மற்றொரு பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு சமுதாயத்தினர் தங்களுக்கு சொந்தமான பீடத்தையும் சீரமைக்க அனுமதி கோரிய போது, கோட்டாட்சியர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கூறி நடைபெற்ற போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.