கன்னியாகுமரியில் தேங்காய் விலை உச்சத்தை தொட்டு, வடசேரி சந்தையில் கிலோ 68 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த நவம்பர் மாதம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய், டிசம்பர் மாதம் 65 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. தற்போது சில்லறை விலையில் கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பதால் தேங்காய் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.