பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் ஆய்வு செய்தார். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகள், கண்காணிப்பு கோபுரம், சிசிடிவி கேமராக்கள் மற்றும் விஐபிக்கள், பொதுமக்கள் செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றை டிஐஜி ஆய்வு செய்தார்.