கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள வணிகவளாக கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை மற்றும் ஓதிமலை சாலையில் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூலதன மானிய நிதியின் கீழ் 56 வணிக வளாக கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த கட்டிடத்தில் ஏல தொகை செலுத்தி வணிகர்கள் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கட்டிடத்தின் மேற்கூரை வழியாக மழைநீர் கசிந்துள்ளது. மேல்தளத்தை சரியாக அமைக்காததால் மழைநீர் கசிவதாகவும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.