வேலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தினரின் பேனரை அகற்ற சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீஸாருடன், அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரை அகற்ற சென்ற மாநகராட்சி ஊழியர்களை, அக்கட்சியினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.