ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. பேருந்து நிலைய மேற்கூரை சேதமடைந்துள்ளதால், மழைக்காலத்தில் பயணிகள் சிரமப்படுகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் இந்த பேருந்து நிலையத்தில் கிடையாது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பேருந்து நிலையத்தை செப்பனிட்டு, அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.