கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூரை சேர்ந்த மூன்று வயது குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், போலீசார் தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை பிரிந்து வாழும் சௌந்தர்யா, தனது குழந்தையை அங்கன்வாடியில் விட்டு வேலைக்கு சென்று விட்ட நிலையில், குழந்தையின் உடல்முழுவதும் சூடு வைக்கப்பட்ட காயம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தந்தனர்.