ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சித்தா பிரிவில் மருந்துகளை தர வெளியே சென்று டப்பாக்களை வாங்கி வரச் சொல்லி அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சித்தா பிரிவிற்கு வரும் நோயாளிகளிடம் மருந்துகள் பெற வெளியே சென்று 5 ரூபாய் கொடுத்து டப்பாக்களை வாங்கி வருமாறு பணியாளர்கள் அலைகழிப்பதாக புகார் எழுந்தது.இதனையடுத்து, நமது நியூஸ் தமிழ் செய்தி குழு அங்கு சென்று ஆய்வு செய்தபோது நோயாளிகளிடம் டப்பாக்களை வாங்கி வரச் சொல்வது தெரியவந்தது.இது குறித்து சித்தா மெடிக்கல் ஆபிஸர் டாக்டர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, டப்பாக்கள் தங்களுக்கு வரவில்லை என்று கூறினார்.