கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சாங்கை என்ற தனியார் முந்திரி ஆலையில் பிடித்தம் செய்யப்பட்ட சேவை கட்டணத்தை வழங்காததை கண்டித்து, பெண் ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 50 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சேவை கட்டணத்தை இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது.