திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறி, அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக போலீசாரிடம் கூறிய மக்கள், தீர்வு எட்டினால் மட்டுமே சிறைபிடிக்கப்பட்ட பேருந்தை விடுவிப்பதாக தெரிவித்தனர்.