கொடைக்கானல் மலையில், உறைபனிப் பொழிவு அதிகரித்துள்ள நிலையில், புல்வெளிகள், செடிகளில் பனி படர்ந்து, வெண் முத்துக்கள் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெப்பமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இன்று, அதிகாலை 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்ததால் கடும் குளிர் நிலவியது. பனிமூட்டத்துடன் கூடிய இயற்கை எழிலை ரசித்தபடியே ஏரிச்சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் சவாரி செய்தனர்.