நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் அறுவடைக்கு தயாரான சம்பா நெல் மணிகள் வயலில் சாய்ந்து சேதமடைவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில், பருவம் தப்பி பெய்யும் மழையால் நெல் மணிகள் மழையில் நீரில் நனைந்து சேற்றில் படியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை பணிகள் பாதித்து நெல்மணிகள் சேதமடைவதாக வேதனை தெரிவித்த விவசாயிகள் அதிக செலவு செய்து அறுவடை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். Related Link புல்வெளிகளில் முத்து முத்தாக ஜொலித்த பனித்துளிகள்