திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே வீட்டில் சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியதில் கணவன், மனைவி படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உப்பரப்பாளையம் பகுதியை சேர்ந்த மணி - தேவி தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், தேவி சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தில் இருந்த வீடுகளிலும் அதிர்வு ஏற்பட்டு ஜன்னல், கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. விபத்தில் மனைவி தேவிக்கு 80 சதவீதம் தீக்காயமும், கணவன் மணிக்கு 40 சதவீதம் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.