விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஞ்சு மில் வேன், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் சென்ற 10 பெண்கள் லேசான காயத்துடன் தப்பிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.