திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தர வலியுறுத்தி மனு அளிக்க வந்தபோது, நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை, குடிநீர் சப்ளை, போர்வெல் மூலம் தண்ணீர் சப்ளை, குப்பை அகற்றும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தாமதமாக நடப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி மனு அளிக்க வந்தனர். சுமார் 1 மணிநேரமாக அவர்கள் காத்திருந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் வராததால் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் வந்த ஆணையரிடம் கவுன்சிலர்கள் மனு அளித்து விட்டு புறப்பட்டு சென்றனர்.இதையும் படியுங்கள் : கள்ளக்குறிச்சியில் தி.மு.க. கவுன்சிலர் மீது வழக்கு பதிவு