கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், ஆணையர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீர்மானங்கள் முறையாக வாசிக்கப்படாமல் வெறும் எண்களை கூறிவிட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கவுன்சிலர்கள் புகார் கூறியதால், ஆணையர் கணேசன் கோபத்துடன் புறப்பட்டு சென்றார்.