ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் கமிஷன் அடிப்படையில் நகராட்சி வார்டு பகுதிகளில் திட்டப்பணிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில் தற்போது நகராட்சி அலுவலகத்திலேயே கமிஷன் பேரம் பேசப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் சம்பவமானது. தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேல்விஷாரம் நகராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக முன்வைத்துள்ளனர். Related Link பர்கூர் மலையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது