நடுரோட்டில் நின்ற ரவுடியை சுற்றி வளைத்த 3 பேர் கொண்ட கும்பல். மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரவுடியை வெட்டிக் கொன்ற கொடூரம். ரத்தம் படிந்த சட்டையுடன் தப்பியோடிய கொலையாளிகள். சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?சாலையில் நின்ற விமலை சுற்றி வளைத்த கும்பல்மதுரை, பொன்மேனி பகுதியில உள்ள ரோட்ல விமல்-ங்குற ரவுடி நின்னுட்டு இருந்துருக்கான். அப்ப அந்த வழியா பைக்ல வந்த மூணு பேர் கொண்ட கும்பல், விமல்ல சுத்துப்போட்டு கை, கால், வாய்ன்னு எல்லா இடங்களையும் வெட்டிட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. இதனால சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த விமல் துடிதுடிக்க உயிரிழந்துட்டான். இந்த கொலை சம்பவத்த நேர்ல பாத்த பொதுமக்கள் உடனே போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து கொலையாளிகள் யாருன்னு கிராம மக்கள் கிட்ட விசாரிச்சுருக்காங்க போலீஸ். அப்ப காரத்தி பாண்டி, கண்ணன், பிரபாகரன்னு மூணு பேர் பைக்ல வந்து, விமல்ல வெட்டிப்போட்டுட்டு தப்பிச்சு போய்ட்டாங்கன்னு சொல்லிருக்காங்க.சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த கொலையாளிகள்இதவச்சு போலீசார் அந்த மூணு பேரையும் வலைவீசி தேட ஆரம்பிச்சாங்க. கொலையாளிகள் எந்த வழியா தப்பிச்சு போனாங்கன்னு தெரிஞ்சுக்க பொன்மேனி பகுதியில உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. அதுல அந்த மூணு பேரும் ரத்தம் படிஞ்ச சட்டையோட பைக்ல தப்பிச்சு போன காட்சி பதிவாகியிருந்துச்சு. அதவச்சு கொலையாளிகள் மூணு பேரும் ஆனையூர்ல பதுங்கியிருந்தத கண்டுபிடிச்ச போலீஸ், நேரா சம்பவ இடத்துக்கு போய்ட்டு அவங்கள கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. கார்த்திக் உள்ளிட்டோரை வம்பிழுத்த விமல்பொன்மேனி பகுதியை சேந்த ரவுடி விமல் மேல பல குற்ற வழக்குகள் இருக்கு. மதுபோதைக்கு அடிமையான விமல், ரோட்ல போறவங்க, வர்றவங்ககிட்ட பிரச்னை பண்ணுறது, அக்கம் பக்கத்துல உள்ளவங்க கிட்ட வம்பிழுக்குறதுன்னு அதையே அன்றாட பொழப்பா வச்சுருந்துருக்கான். ஒரு வழக்கு விஷயமா சிறையில இருந்த விமல், சமீபத்துல வெளியில வந்துருக்கான். அடுத்து சொந்த ஊர்ல இருந்தா தன்னை யாரும் வெட்டிக் கொன்னுருவாங்கன்னு பயந்துபோன விமல் திண்டுக்கல்ல உள்ள ஒரு கிராமத்துல பதுங்கி இருந்துருக்கான். இந்த நிலையில பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்துருக்கான் விமல். அன்னைக்கு ஃபுல்லா வீட்ல இருந்த விமல், மறுநாள் காலையில சம்மட்டிபுரம் பகுதியை நோக்கி மதுபோதையில பைக்ல போய்ட்டு இருந்துருக்கான். அப்ப பாதி வழியில இவரோட நண்பர்களான கார்த்திக் பாண்டி, கண்ணன், பிரபாகரன்னு மூணு பேரும் நின்னுட்டு இருந்துருக்காங்க. அவங்கள பாத்த உடனே பைக்க நிறுத்துன விமல், டேய் நான் பெரிய ரவுடி, என்ன பாத்து வணக்கம் வைக்காம திமிறா நின்னிட்டு இருக்கிங்க, நான் ஜெயில்ல இருக்கும்போது ஏன் என்ன மனுபோட்டு பாக்க வரலன்னு கேட்ருக்கான்.மதுவாங்கி தரும்படி மூவரையும் தாக்கிய விமல்அதுக்கப்புறம் அந்த மூணு பேர் கிட்டயும் மது வாங்கி தரும்படி கேட்ருக்கான். அதுக்கு அந்த மூணு பேரும் எங்ககிட்ட இப்ப பணம் இல்லன்னு சொல்லிருக்காங்க. இதனால கடும் கோபமான விமல், அந்த மூணு பேரையும் தாக்கிட்டு அங்கருந்த கிளம்பிட்டான். அடுத்த கொஞ்சம் நேரத்துல மறுபடியும் சம்மட்டிபுரம் வந்த விமல், எனக்கு மது வாங்கித் தரமாட்டேன்னு சொன்ன உங்கள, நான் உயிரோடையே விடமாட்டேன், கூடிய சீக்கிரத்துல உங்க மூணு பேரையும் தீர்த்து கட்டுவேன்னு மிரட்டிருக்கான். இதகேட்டு பயந்துபோன அவர்கள், விமல் எப்பனாலும் நம்ம மூணு பேரையும் கொலை பண்ணிருவான், அதனால அவன், நம்ம கதைய முடிக்கிறதுக்கு முன்னாடி, நம்ம அவன் கதைய முடிச்சிறனும்னு முடிவு பண்ணிருக்காங்க.கார்த்திக்பாண்டி, கண்ணன், பிரபாகரன் ஆகியோர் கைதுஅதுபடி விமல்ல கண்காணிக்க ஆரம்பிச்சுருக்காங்க அந்த கும்பல். அப்ப விமல் பொன்மேனி பகுதியில தனியா நின்னுட்டு இருந்தது தெரியவந்துருக்கு. இதனால உடனே பைக்க எடுத்துட்டு அங்க போன கும்பல் மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்து விமல சரமாரியா வெட்டிக் கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. ஆனா சிசிடிவி காட்சி மூலமா கொலையாளிகள் பதுங்கியிருந்த இடத்த தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், கார்த்திக்பாண்டி, கண்ணன், பிரபாகரன்னு மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.இதையும் பாருங்கள் - கணவனே எமனாக மாறிய பின்னணி?