தந்தை பெரியாரை அவமதிக்கும் எவரையும் தாம் மதிக்கப்போவதில்லை என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படுவதையே ஆளுநர் ஆர்.என்.ரவி எண்ணமாக கொண்டிருப்பதாக விமர்சித்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரின் போக்கு மேலும் மேலும் திமுக அரசுக்கு சிறப்பை தான் சேர்க்கிறது என்றார்.