வழக்கம்போல் கடைக்கு செல்வதற்காக புறப்பட்ட தம்பதி. தானும் வருவதாக கூறி, அடம் பிடித்த 10 வயது மகள். சிறுமியின் நடவடிக்கையில் புதிதாக தெரிந்த மாற்றம். மகளின் உடம்பில் இருந்த நக கீறல்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர். சிறுமியிடம் அத்துமீறிய கொடூரன் யார்? நடந்தது என்ன?4ஆம் வகுப்பு படிச்சிட்டு இருக்குற மகள், பள்ளி விடுமுறை நாட்கள்ல வீட்டுல இருக்கவே பிடிக்கல நானும் உங்கூட வரேன்னு சொல்லி அவங்க அப்பா, அம்மாக்கிட்ட அழுதுருக்கா. கார்பெண்டர் கடை வச்சிருக்குற பெற்றோர், அங்க வந்து நீ என்ன பண்ணுவ? வீட்டுல இருந்து விளையாடு கொஞ்ச நேரத்துல வந்துருவோம்னு சொல்லிருக்காங்க பெற்றோர். ஆனா, சிறுமி நானும் உங்க கூட கடைக்கு வரேன்னு பதற்றத்தோட அடம் புடிச்சிருக்கா. லீவு நாட்கள வீட்ல இருக்கணும், விளையாடணும், டிவி பாக்கணும்னு தான் ஆசைப்படுவாங்க, ஆனா நம்ம பொண்ணு மட்டும் ஏன் எப்போதும் இல்லாம கடைக்கு வரேன்னு அடம்புடிக்கிறா அப்டிங்குற கேள்வி பெற்றோருக்கு வந்துருக்குது. இது மட்டுமில்லாம, கொஞ்ச நாளாவே மகள் எந்நேரமும் சோகமா இருக்குறதையும் கவனிச்சிருக்காங்க. ஏன் சோகமா இருக்குற? எதுக்கு வீட்ல இருக்காம எங்கக்கூட வரேன்னு கேட்ருக்காங்க தாய். அதெல்லாம் ஒண்ணுமில்லமா வீட்ல இருக்க புடிக்கலனு சொன்ன சிறுமியோட கண்ணுல இருந்து கண்ணீர் வடிஞ்சிருக்குது.இத பாத்து அதிர்ச்சியான தாய், மகளோட கைய பிடிச்சி என்னாச்சுனு கேட்டப்ப வலிக்குதும்மா தொடதீங்கன்னு அழுதுருக்காங்க. மகளோட கை, கால்னு நிறைய இடங்கள்ல நகக்கீறலா இருந்துருக்குது. ஷாக்கான பெற்றோர் ஏன் இப்படி கீறலா இருக்குதுனு துருவித்துருவி கேட்டப்ப மகள் சொன்ன பதில் தூக்கி வாரி போட்ருக்குது. வேலூர், குடியாத்தத்துல உள்ள ஒடுகத்தூர் பகுதில உள்ள சிறுமியோட அப்பா சொந்தமா கார்பெண்டர் கடை வச்சு நடத்திட்டு இருக்காரு.இவர்கிட்ட 55 வயசான வெங்கடேசன்-ங்குறவன் வேலை பாத்திட்டு இருந்துருக்கான். சிறுமியோட அப்பா கடைக்கு தேவையான பொருட்கள வாங்குறதுக்காக அடிக்கடி வெளியே போயிடுவாராம். அதனால, வெங்கடேசன் தான் கடைய திறந்து மூடுறதுல இருந்து எல்லாத்தையும் கவனிச்சிட்டுருந்துருக்கான். முதலாளி வீட்டுலேயே தங்கி வேலை பாத்திட்டு இருந்த வெங்கடேசன், காலையில கடைக்கு போனா நைட்டு 11 மணிக்கு மேலதான் வீட்டுக்கு வருவான். ஞாயிற்று கிழமையான லீவு. இந்த விடுமுறை நாட்கள சிறுமியோட அப்பா, மனைவிகூட பொருட்கள் வாங்குறதுக்காக வாரம் வாரம் கடைக்கு போவாராம். அப்படி போகும்போதெல்லாம் தன்னோட 10 வயசு மகள வீட்டுலதான் விட்டுட்டு போவாங்க. வீட்டுல வெங்கடேசன் இருக்கான்னு நம்பி 10 வயசு மகள விட்டுட்டு போன பெற்றோருக்கு, அவனால தான் மகளுக்கு நடக்ககூடாதது நடக்க போகுது அப்டிங்குறது தெரியாம போச்சு.வழக்கம்போல, கடந்த ஞாயிற்று கிழமை கடைக்கு பொருட்கள வாங்க கிளம்பிருக்காங்க. அப்ப, 10 வயசு மகள் தானும் கூட வர்றன்னு அழவே, பெற்றோர் என்ன ஏதுன்னு நிதானமா உக்காந்து விசாரிச்சாங்க. அப்போ, வெங்கடேசன் அங்கிள் என்ன பேட் டச் பண்றாரும்மா தனியா கூப்பிட்டு போய், எனக்கு வலிக்குதுமான்னு சொல்லி அழுதுருக்காங்க. அத கேட்டதும் அதிர்ச்சியான பெற்றோர், இத ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லன்னு கேட்டப்ப, வெங்கடேசன் அங்கிள் தான் இதெல்லாம் உங்ககிட்ட சொன்ன வீட்டுல தனியா இருக்கும்போது அடிச்சிருவேன்னு மிரட்டுனாறுன்னு சொல்லிருக்காங்க. மகள் சொன்னத கேட்டதும் கொந்தளிச்சுப்போன பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துல வெங்கடேசன் மேல புகார் கொடுத்தாங்க. அந்த புகார் அடிப்படையில வெங்கடேசன் மேல போக்சோ வழக்குபதிவு பண்ண அவன அரெஸ்ட் பண்ணி சிறையில தள்ளிருக்காங்க. பெண் பிள்ளைகளோட நடவடிக்கைகள்ல மாற்றம் தெரிஞ்சாலோ, ஒரே விஷயத்த திரும்ப திரும்ப சொன்னாலோ உடனேயே பெற்றோர், காதுகுடுத்து கேக்கணும் அப்டிங்குறதுக்கு இந்த சம்பவம் தான் உதாரணம்.