கனிம நில வரி உள்ளிட்ட தமிழக அரசின் உத்தரவை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதி கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒசூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வரும் கிரஷர்கள், கல்குவாரிகளில் இருந்து கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு எம்சாண்ட், ஜல்லி ஆகியவை லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கற்களுக்கு கனமீட்டருக்கு பதிலாக, மெட்ரிக் டன் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டும், பிற மாநிலங்களில் இல்லாத வகையில் கனிம நில வரியை செலுத்த வேண்டும் என்கிற அரசின் உத்தரவை கண்டித்து கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.