கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் புதுச்சேரியில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.