நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பிராந்தியங்கரை, மூலக்கரை, அண்டகத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.