திருவள்ளூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், மதிய நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி. தாகத்திற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்செயினை பறித்த இளைஞர்கள். பட்டப்பகலில் நடந்த துணிகர கொள்ளை சம்பவத்தின் பகீர் பின்னணி என்ன.?ஏகப்பட்ட வீடுகள், அடுத்தடுத்து இருக்குற, நெருக்கமான குடியிருப்பு பகுதி அது. அந்த தெருவுல, ரெண்டு மூணு இடத்துல புது வீடு வேற கட்டிட்டு இருக்காங்க.. அதனால ஆள் நடமாட்டமும் அதிகமாவே இருந்துருக்கு. அப்போ, அங்க உள்ள வீட்டுல இருந்து, நாராயணா நாராயணா-ன்னு மூதாட்டி ஒருத்தங்க கத்தி கூச்சல் போட்டுருக்காங்க. இந்த சத்தம், கட்டட வேலை பாத்துட்டு இருந்த ஒரு மேஸ்த்ரிக்கு கேட்டுருக்கு. உடனே அவரு, கூட வேலை பாத்துட்டு இருந்த தொழிலாளர்கள கூப்டுட்டு, சத்தம் கேட்ட வீட்டுக்கு போய் பாத்திருக்காரு.. அங்க கதவு வெளிப்பக்கமா பூட்டிருந்துருக்கு. கதவ தொறந்ததும் உள்ள மூதாட்டி கீழ விழுந்து கிடந்துருக்காங்க. அதுக்கப்புறம் அவங்க கிட்ட விசாரிச்சப்ப தான், பட்டப்பகல்ல நடந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்திருக்கு.திருவள்ளூர், மேட்டுப்பாளையத்த சேர்ந்தவங்க 85 வயசான மூதாட்டி ரோசம்மாள். கடந்த சில வருஷங்களுக்கு முன்னாடி கணவர் உடல்நல குறைவால உயிரிழந்ததால, ரோசம்மாள் தனியா வாழ்ந்துட்டு வராங்க. பிள்ளைங்களுக்கு கல்யாணமாகி தனித்தனியா குடியிருந்து வராங்க. மாசத்துக்கு ஒருமுறை ரோசம்மாள் அவங்க பசங்க வீட்டுக்கு வந்து தாய பாத்துட்டு போறது வழக்கம். இதுக்கு இடையில, மூதாட்டி ரோசம்மாள் வழக்கம்போல கதவ தொறந்து வச்சிட்டு கட்டில படுத்துட்டு இருந்தாங்க. அப்ப, கதவு தட்டுற சத்தம் கேட்டு ரோசம்மாள் வெளியே எழுந்து வந்து பாத்தப்ப, வீட்டு வாசல ரெண்டு இளைஞர்கள் நின்னுட்டு இருந்தாங்க. யாருப்பா நீங்க, என்ன வேணும் உங்களுக்குன்னு மூதாட்டி ரோசம்மாள் கேட்டப்ப, ரொம்ப தாகமா இருக்கு பாட்டி, கொஞ்சம் தண்ணீர் கொடுங்கன்னு கேட்டுருக்காங்க அந்த ரெண்டு இளைஞர்கள்.சரி, நில்லுங்கப்பா தண்ணி எடுத்துட்டு வரேன்னு ரோசம்மாள் தண்ணீர் எடுத்துட்டு வர்றதுக்காக கிச்சனுக்குள்ள போக, அந்த இளைஞர்கள் வீட்டுக்குள்ள போயிருக்காங்க. கண் இமைக்கும் நேரத்துல, மறச்சி வச்சிருந்த கத்திய எடுத்த இளைஞர்கள், தண்ணி எடுத்துட்டு வந்த ரோசம்மாள் கழுத்துல வச்சி மிரட்ட ஆரம்பிச்சிருக்காங்க. கழுத்துல கத்தி வச்சதும் பதற்றமான மூதாட்டி, கத்தி கூச்சல் போட்டுருக்காங்க. அப்ப, இளைஞர்கள் ரெண்டு பேரும் ரோசம்மாளோட வாய துணியால பொத்தி நகை, பணத்த கேட்டு மிரட்ட ஆரம்பிச்சிருக்காங்க. கழுத்துல கத்தி இருந்தத பாத்ததும் அதிர்ச்சியான மூதாட்டி, நகை, பணம்லாம் பீரோவுல இருக்குன்னு சொல்லி, சாவி இருக்குற இடத்தையும் அந்த கொள்ளையன்கள் கிட்ட சொல்லிருக்காங்க. அதுக்கப்புறம், அந்த கொள்ளையன், வேக வேகமா பீரோவ திறந்து அங்க இருந்து 2 பவுன் தங்க நகையையும், மூதாட்டி போட்டுருந்த மூணு சவரன் செயினையும் பறிச்சிக்கிட்டு ரோசம்மாள கீழ தள்ளி வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு தப்பிச்சு போயிருக்காங்க. அதுக்குப்பிறகு மூதாட்டி நாராயணா நாராயணான்னு சத்தமா கூப்பிடவே, பக்கத்துல இருந்தவங்க எல்லாரும் ஓடிவந்துருக்காங்க. அதுக்கப்புறம், தகவல் தெரிஞ்சு சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மூதாட்டி ரோசம்மாள்கிட்ட விசாரணை நடத்துனாங்க. கொள்ளையில ஈடுபட்ட இளைஞர்களுக்கு 30ல இருந்து 35 வயசு இருக்கும்னு சொல்லப்படுது. அதுமட்டுமில்ல, நகை பணத்த திருடிட்டு போன, அந்த கொள்ளையனகள் நடந்து போன சிசிடிவி காட்சியயையும் போலீஸ் கைப்பற்றிருக்காங்க. சிசிடிவி காட்சி, அதுக்கப்புறம், மூதாட்டி ரோசம்மாள் சொன்ன அங்க அடையாளங்கள வச்சு, போலீஸ் அந்த கொள்ளையன்கள தீவிரமா தேடிட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - நடுரோட்டில் நடந்த கொடூரம்,ஆட்டோ டிரைவர்களுக்கு வலைவீச்சு | Auto Drivers Attack | Kanyakumari