கள்ளக்காதலனின் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்த கள்ளக்காதலி. அரக்க பறக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்த கள்ளக்காதலன். விசாரணை செய்தபோது வெளியான திடுக்கிடும் தகவல். கள்ளக்காதலன் வீட்டில் கள்ளக்காதலி தூக்கில் சடலமாக கிடந்தது ஏன்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? பின்னணி என்ன?* அவசர அவசரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த இளைஞர்* அறைக் கதவை பலமுறை தட்டியும் காதலி திறக்கவில்லை என புகார்* கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார்ஒரு இளைஞர் அவசர அவசரமா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்துருக்காரு. தன் வீட்டுக்கு காதலி வந்ததாகவும், பெட்ரூமுக்குப் போய் கதவை அடைச்சிக்கிட்டதாகவும், எவ்வளவோ தட்டியும் திறக்கவே இல்ல சார்னும் அழுதுருக்காரு. அடுத்து, எந்த கேள்வியும் கேக்காம அந்த இளைஞரோட போன போலீசார் அவங்க வீட்டு பெட்ரூம் கதவை உடைச்சி உள்ள போய் பாத்துருக்காங்க. அப்போ, அந்த இளைஞரோட காதலி தூக்குல சடலமா தொங்கிட்டு இருந்துருக்காங்க. அதப்பாத்து அதிர்ச்சியான இளைஞர், இளம்பெண் உயிரிழந்ததற்கு அழுதத விட பதற்றப்பட்டது தான் அதிகமா இருந்துச்சு. அதுக்குப்பிறகு போலீசார் நடத்துன விசாரணையிலதான் இளைஞரோட பதற்றத்துக்கான காரணமே தெரியவந்துச்சு.* சொந்த ஊரில் தனியாக வசித்து வந்த மனைவி பிரியா* கணவன் அனுப்பும் பணத்தை ஆடம்பர செலவு செய்த பிரியா* ஃபாஸ்ட் புட் கடை ஓனருடன் பிரியாவிற்கு ஏற்பட்ட தகாத உறவு* ராஜாவுக்கு பணத்தை வாரி வழங்கிய பிரியாஅரியலூர், நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். 34 வயசான இவரு கடந்த சில ஆண்டுகளா துபாய்ல வேலை பாத்துட்டு இருக்காரு. ஆறு மாசத்துக்கு ஒருமுறை ஊருக்கு வந்து சில நாட்கள் விடுமுறையில இருந்துட்டு மறுபடியும் துபாய்க்கே போயிருவாரு செல்வம். அதனால அவரோட மனைவி மட்டும்தான் ஊர்ல இருந்துருக்காங்க. 28 வயசான மனைவி பிரியா கணவர் அனுப்புன பணத்துல தான் நினைச்ச பொருட்களை உடனே வாங்குறது, அடிக்கடி ஷாப்பிங் போறது, தினமும் ஓட்டல்ல சாப்பாடு வாங்கி சாப்டுறதுனு சுதந்திரமா இருந்துருக்காங்க. அப்படிதான், உள்ளூருக்குள்ள ஃபாஸ்ட் புட் கடை வச்சிருக்குற 33 வயசான இளைஞர் ராஜாவோட கடைக்கு அடிக்கடி போயிருக்காங்க பிரியா. ரெகுலர் கஸ்டமரா இருந்த அவங்ககூட கடை ஓனர் ராஜாவுக்கு நட்பு ஏற்பட்ருக்குது. அடுத்து, கடை ஓனருக்கு கால் பண்ணி வீட்டுக்கே சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்ட்ருக்காங்க பிரியா. உள்ளூர்ல இருந்தாலும் செல்போன்ல மணிக்கணக்கா பேசுறது, வாட்ஸ்அப்ல சேட் பண்றது, வீடியோ கால் பண்றதுன்னு இருந்த ரெண்டுபேரும் அடிக்கடி தனிமையிலயும் இருந்துருக்காங்க. கள்ளக்காதல்ல மூழ்குன பிரியா, ராஜாவுக்கு பணத்தையும் வாரி வழங்கிருக்காங்க.* விடுமுறையில் ஊருக்கு வருவதாக மனைவியிடம் கூறிய செல்வம்* பணம் குறித்து கணவன் கேட்பார் என அச்சப்பட்ட பிரியா* கொடுத்த பணத்தை ராஜாவிடம் திருப்பிக் கேட்ட பிரியாகணவன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் ராஜாவோட ஆடம்பர செலவுக்கு அள்ளிக்குடுத்து கள்ளக்காதலே கதினு இருந்துருக்காங்க பிரியா. ராஜாவும் அந்த பணத்தை தண்ணி மாதிரி செலவழிச்சி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததோட தன்னோட கடையையும் டெவலப் பண்ணிருக்காரு. இதுக்குமத்தியில மனைவி பிரியாவுக்கு கணவன் செல்வம் போன் பண்ணிருக்காரு. தான் விடுமுறையில ஊருக்கு வரப்போறதா சொல்லிருக்காரு. அதக்கேட்டு சந்தோஷப்படாம அதிர்ச்சியாகிருக்காங்க மனைவி. இத்தனை நாளும் அவரு அனுப்பின பணத்தை ராஜாவுக்கு கொடுத்துட்டோமே, தான் அனுப்புன பணத்த எங்கனு கணக்கு கேட்டா என்ன சொல்றதுனு பதறுன பிரியா விறுவிறுனு கள்ளக்காதலன் ராஜா வீட்டுக்கு ஓடிருக்காங்க. என்னோட கணவன் துபாய்ல இருந்து வரப்போறாராம், ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிட்டாராம், அதனால இதுநாள்வரைக்கும் தன்கிட்ட வாங்கின பணத்தை எல்லாம் குடுங்க, அப்பதான் எங்க வீட்ல எந்த பிரச்சனையும் நடக்காதுனு ராஜா கிட்ட சொல்லிருக்காங்க பிரியா. * பணம் தொடர்பாக ராஜா-பிரியா இடையே கடும் வாக்குவாதம்* ராஜா வீட்டின் பெட் ரூமுக்குள் சென்று கதவை அடைத்த பிரியா* பிரியா கதவை திறக்காததால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ராஜாஅதுக்கு, தன்கிட்ட பணமே இல்ல, திடீர்னு முழுவதையும் கேட்டா நான் எங்க போறதுனு சொன்ன ராஜா ஏதாவது சொல்லி உன் கணவர்கிட்ட சமாளிச்சிரு, விடுமுறை முடிஞ்சி மறுபடியும் துபாய்க்கே போயிருவாரு, அதனால பிரச்சனையெல்லாம் வராது பாத்துக்கலாம்னு அசால்டா சொல்லிருக்காரு. அப்போ, முடியவே முடியாது பணத்தை குடுத்தே ஆகணும், இல்லனா என் கணவர் என்னை உயிரோட விடமாட்டாருனு கெஞ்சிருக்காங்க பிரியா. ஆனா, தன்கிட்ட பணமே இல்லன்னு சாதிச்ச ராஜா தற்போதைக்கு ரெடி பண்ணி தரவும் முடியாதுன்னு அழுத்தமா சொன்னதா தெரியுது. அதனால, ரெண்டுபேருக்கும் வாக்குவாதம் வெடிச்சிருக்குது. ஒருகட்டத்துல ராஜா பணம் தரவேமாட்டாரு, துபாய்ல இருந்து கணவன் வந்தபிறகு பணத்த கேட்டு பெரிய பிரளயமே வெடிக்கப்போகுதுனு அச்சப்பட்ட பிரியா, ராஜா வீட்டு பெட்ரூம் கதவ அடைச்சிட்டு ஃபேன்ல தூக்குல தொங்கிருக்காங்க. பலமுறை தட்டிப்பாத்தும் பிரியா கதவ திறக்கவே இல்லாததால பயந்த ராஜா செந்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிப்போய் தன் காதலி எங்க வீட்டுக்கு வந்ததாகவும், தங்களுக்குள்ள சின்ன சண்டை வந்ததால பெட்ரூம் கதவ உள்பக்கமா அடைச்சிட்டு திறக்கலனும் சொல்லி அழுதுருக்காரு. அப்போ, உண்மையிலேயே காதலி தான்னு நினைச்ச காவலர்களும் எந்த விசாரணையும் பண்ணாம ஒரு உசுர காப்பாத்தணும்னு அரக்க பறக்க ஓடிருக்காங்க. ஆனாலும் அந்த பொண்ண காப்பாத்த முடியல. அதுக்குப்பிறகு நடத்துன விசாரணையிலதான் கள்ளக்காதல் விவகாரமே வெளிச்சத்துக்கு வந்தது.* உயிரை மாய்த்துக்கொண்ட பிரியா* ராஜா நாடகம் ஆடுகிறாரா? போலீசார் விசாரணைபிரியாவே பெட்ரூமுக்குள்ள ஓடிப்போய் தூக்குல தொங்கிட்டதா ராஜா சொன்னாலும், அதுதான் உண்மையிலேயே நடந்துச்சா? இல்ல பணம் குடுக்க கூடாதுங்குறதுக்காக அடிச்சி கொலை பண்ணி ஃபேன்ல தொங்கவிட்டுட்டு அதமறைக்க இளைஞர் நாடகம் ஆடுறாரா? அப்டிங்குற சந்தேகத்துல போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திட்டு இருக்காங்க. அதேமாதிரி போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்தாலும் நடந்தது கொலையா? தற்கொலையாங்குறது தெரியவரும். Related Link கொடைக்கானல் - துணை நடிகையின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்