உயிரிழந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் சென்னை முகலிவாக்கம் எல் அண்டு டி காலனி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.