தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளதால், விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் கூட தேங்காய் விலை 40 ரூபாய் வரை மட்டுமே உயர்ந்தது. ஆனால் தற்போது ஒரு தேங்காய் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருச்செந்தூர், உடன்குடி, பரமன் குறிச்சி, காயாமொழி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய தண்ணீர் வசதி இல்லாததல் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டு விளைச்சல் சரிந்தது. இதனால் பலரும் தென்னை விவசாயத்தை கைவிட்டதால், தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.