ஒரு மாத காலத்திற்குப்பிறகு திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை நடைப்பயிற்சி சென்றதை தூரத்தில் இருந்து பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர். யானையை பரிசோதனை செய்த மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் யானை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதால் பகல் நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடைபயிற்சி செய்வதற்கு அறிவுறுத்தினார்.