சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொள்முதல் செய்வதில் தாமதம் காட்டியதால் 3 ஆயிரம் மூட்டை நெல் சேதமடைந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கட்டிக்குளத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளதால், குறைந்த அளவே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 20 நாட்களாக விவசாயிகள் காத்துக்கிடந்த நிலையில், திடீரென பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.