நெல்லை மேலப்பாளையம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி, மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேலப்பாளையத்தை அடுத்த வீரமாணிக்கபுரம் தொன்மை மைக்கேல்புரத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றக் கோரி, பெண்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.