ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் குவிந்த குப்பைகளை அகற்றாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், அங்கு குவிந்திருந்த குப்பையால் துர்நாற்றம் வீசியது. இதனை உடனே அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.