நீலகிரி மாவட்டம் கூடலூரில் மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்கவும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க கோரியும் சிபிஐஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், வன விலங்கு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.