சென்னை, மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஆதரவற்றோர் தங்குமிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார். அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வு தொடங்கி 300ஆவது நாளை எட்டியதையொட்டி சென்னை கொளத்தூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, டிஆர்பி ராஜா, மேயர் பிரியா பங்கேற்றனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேயர், மெரினா கடற்கரையில் திறக்கப்படும் தங்குமிடத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற இடங்களிலும் இதே போன்று கட்டப்படும் எனக் கூறினார்.