வீரனாகப் பிறந்து வீரனாக வளர்ந்து வீரனாக வாழ்ந்து மறைந்த முத்துராமலிங்க தேவர். வீரனாகவே இருக்கிறார் என கலைஞர் கூறியதை நினைவு கூர்ந்து தேவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 ஆவது குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய முதலமைச்சர் தேவருக்கு புகழ் சேர்க்கக்கூடிய பல்வேறு பணிகளை செய்துள்ளதாக பட்டியலிட்டார்.