தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி மலை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கைலாய கீழ சொக்கநாதர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சொக்கநாதர் சுவாமிக்கு 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.