கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில், 7 திரைகள் நீக்கி 3 முறை காண்பிக்கப்பட்ட ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வடலூர் சத்தியஞான சபையில், ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி மாத பூச நட்சத்திரத்தையொட்டி, இரவு 7.45 மணியளவில் 7 திரைகளை நீக்கி, 3 முறை ஜோதி தரிசனம் காட்டப்பட்டது . இதனை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.