60 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 22 அன்று இரவில் ஏற்பட்ட கோரப்புயலால் உருக்குலைந்த தனுஷ்கோடியில் அழிவின் எச்சங்களாக இடிந்த கட்டடங்கள் இன்றும் காட்சியளிக்கின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து 18 கிலோ மீட்டரில் அமைந்துள்ள தனுஷ்கோடி 100 ஆண்டுகளுக்கு முன்பு புனித தலமாகவும், வணிக நகரமாகவும் சிறந்த துறைமுகமாகவும் விளங்கியது. 1964 ம் ஆண்டு டிசம்பர் 22 ம் தேதி இரவில் ஏற்பட்ட கோரப்புயலால் அங்கிருந்த பள்ளிகூடம், கோவில், சர்ச் உள்ளிட்ட பெரிய கட்டடங்கள் உருக்குலைந்தன. தனுஷ்கோடியை மீண்டும் புத்துயிர் பெற செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.