திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சாரண, சாரணியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார். பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள Global Village அரங்கத்தை பார்வையிட்ட அவர், சாரண, சாரணியரின் நடன, நாட்டிய நிகழ்வுகளையும் கண்டுகளித்தார்.