வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக, காவிரிப்படுகை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மீட்பு உபகரணங்களுடன் NDRF குழுக்கள் விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தனித்தனியே ஒரு குழுவும், புதுச்சேரி மாநிலத்திற்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டன. குழுவுக்கு 30 பேர் வீதம் 8 குழுக்களாக வீரர்கள், 4 மோப்ப நாய்கள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் விரைந்தனர்.