திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடைபெற்ற திமுக பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணி வழங்கவில்லை என உணவு பரிமாறும் இளைஞர்களை திமுகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை அடுத்த நந்தினி மஹாலில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட திமுக கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினருக்கு பிரியாணி விருந்து வழங்கபட்டது. அப்போது, தரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த திமுகவினர் சிலர், தங்களுக்கு முறையாக பிரியாணி பரிமாறவில்லை என கூறி உணவு பரிமாறும் இளைஞர்களை தாக்கினர்.