கேவை... பழக்கடையில் வேலை பார்த்து வந்த மனைவி. அடிக்கடி பழக்கடைக்கு சென்ற கணவனுக்கு அங்கு பணிபுரிந்த மனைவியின் தோழி மீது ஈர்ப்பு. தன் மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என குண்டை தூக்கிப்போட்ட தோழியின் கணவர். மறுத்த இளம்பெண்ணை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம். 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த கொலை வழக்கு. குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின் விவரம் என்ன?புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஜெகன், கோவை நஞ்சுண்டாபுரத்துல உள்ள ஒரு தனியார் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. சாய்பாபா காலனியில உள்ள ஒரு பழக்கடையில ஜெகனோட மனைவி வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. அந்த பழக்கடையில வேலை பாத்த ஒரு இளம்பெண், ஜெகனோட மனைவி கிட்ட தோழியா பழகிருக்காங்க.தினமும் மனைவிய அழைக்கிறதுக்காக கடைக்கு வந்த ஜெகன், மனைவியோட தோழிக்கிட்ட பேசிருக்காரு.சாதாரணமா பேச ஆரம்பிச்ச மனைவியோட தோழிமேல, ஜெகனுக்கு ஒரு ஈர்ப்பு வந்துருக்குது.அதனால, தினமும் போன் பண்ணி பேசுறது, வாட்ஸ்அப்ல மெசேஜ் அனுப்புறதுனு இருந்துருக்காரு. தோழியோட கணவர் தானேனு நினைச்ச இளம்பெண்ணும் அத பெருசா எடுத்துக்கல.ஆனா, கணவரோட கால் ஹிஸ்ட்ரிய பாத்த மனைவி என் தோழிக்கிட்ட தேவையில்லாம எதுக்கு பேசுறீங்க? தினமும் எஸ்எம்எஸ் எதுக்காக அனுப்புறீங்கனு சண்டை போட்ருக்காங்க. தம்பதிக்குள்ள நடந்த இந்த சண்டை எதுவுமே தோழிக்கு தெரியாது.இதுக்கு மத்தியில, ஜெகனுக்கு பிறந்தநாள் வந்ததால, ஒரு வாட்ச் கிப்ட் பண்ணிருக்காங்க இளம்பெண். அதுலயும் அந்த இளம்பெண்ணுக்கு எந்த உள்நோக்கமும் இல்ல. ஆனா, ஜெகனுக்கு உள்ளுக்குள்ள ஒரு பிளான் இருந்துருக்குது. அந்த பிளான்படி, இளம்பெண்ணோட வீட்டுக்கு வந்துருக்காரு ஜெகன். என்ன ஆச்சு? நீங்க மட்டும் வந்துருக்கீங்க? என் தோழியை எங்கனு கேட்ருக்காங்க இளம்பெண். அப்போ, நான் அவளை டைவர்ஸ் பண்ணிடுறேன், எனக்கு உன்னை தான் புடிச்சிருக்கு, நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு குண்டை தூக்கி போட்ருக்காரு ஜெகன்.அவரோட இந்த பேச்சை எதிர்பார்க்காத இளம்பெண், என்ன பேசுறீங்க? உங்கமேல எந்த விருப்பமும் இல்ல, என் தோழியோட போய் வாழுற வழிய பாருங்கனு சொல்லிருக்காங்க இளம்பெண். ஆனா, அத காதுல வாங்காத ஜெகன், அந்த இளம்பெண்ணை கட்டாயப்படுத்திருக்காரு. இதனால கடுப்பான இளம்பெண், வீட்டவிட்டு வெளியே போங்க இல்லனா போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேனு சொல்லிருக்காங்க. அப்போ, ஆத்திரமடைஞ்ச ஜெகன் இளம்பெண்ணை அடிச்சி பாலியல் வன்கொடுமை பண்ணிட்டு கழுத்த நெரிச்சி கொலை பண்ணிருக்காரு. அடுத்து, சடலத்த அப்டியே போட்டுட்டு பைக்ல அங்க இருந்து தப்பி ஓடிட்டாரு.இந்த சம்பவம் நடந்த அரைமணிநேரத்துல தன்னோட அக்காவ பாக்குறதுக்காக தங்கச்சி வீட்டுக்கு வந்துருக்காங்க.அதுக்குப்பிறகுதான் போலீஸ் வந்து சிசிடிவி காட்சி பதிவுகளை எல்லாமே ஆய்வு பண்ணி ஜெகன்கிட்ட விசாரணை நடத்திருக்காங்க. நடந்த எல்லாத்தையும் அவரே ஒத்துக்கிட்டாரு. இந்த சம்பவம் நடந்தது 2021ல.இது சம்மந்தமான வழக்கு நாலு வருஷமா கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்துல நடந்துட்டு இருந்தது. இப்போ, குற்றவாளி ஜெகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்ருக்காரு.