தேர்தல் தோல்வி பயத்தால், அரசு கல்லூரி மாணவர்களுக்கு திமுக அரசு இலவச லேப்டாப் வழங்கியதாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச மடிக்கணினி திட்டத்தை ஏற்றுக்கொண்டு, திமுக அரசு செயல்படுத்துவதை வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும், கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்களுக்கு லேப்டாப் தராததை போல, 3 ஆண்டுகளாக எதுவும் தராமல் தற்போது 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.