இந்தோனேசியாவில் இருந்து சட்ட விரோதமாக கொட்டைப் பாக்குகள் இறக்குமதி செய்ததாக தூத்துக்குடி மாநகராட்சி 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் என்கிற ஜான் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 டன் கொட்டைப் பாக்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.