வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. திமுக தேர்தல் அறிக்கை குழு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு ஒன்றை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக தலைமை அமைத்தது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்பி பேட்டிஇக்கூட்டத்திற்கு பின்னர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. கூறியதாவது;மக்களை தேடிச் சென்று அவர்கள் கோரிக்கையை ஏற்று, அதை அறிக்கையாக வெளியிடுவது தான் திமுகவின் நோக்கம். திமுக திட்டங்களை ஜெராக்ஸ் காப்பியாக முன்கூட்டியே 5 தேர்தல் வாக்குறுதியை அதிமுகவினர் கொடுத்துள்ளனர். மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்குவது 2018ஆம் ஆண்டு பிரதமரை அழைத்து வந்து தொடங்கப்பட்ட திட்டம். அதை மீண்டும் இந்த தேர்தல் அறிக்கையில் அதிமுகவினர் தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார். கருத்துக்கேட்பு இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டன் ரவீந்திரன், மருத்துவர் எழிலன், நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், சந்தானம் ஐஏஎஸ், சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் கலந்துகொண்டனர். கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த விவசாய, வணிக சங்கங்கள், தொழில் முனைவோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இதையும் பாருங்கள் - இளம்பெண்ணின் செயலால் பறிபோன உயிர்