திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நம்முடைய தொகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக குப்பைகளை கூட பக்கத்து தொகுதியில் தான் போடுவேன் என்று திமுக எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் பிஸ்கட் கவரை கூட அருகில் உள்ள பூந்தமல்லி தொகுதியில் தான் போடுவேன் என்று சிரித்தபடியே கூறினார்.