நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினரை மத்திய அரசு அனுமதிக்கவில்லை என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கர் குறித்து பேசியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.