திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கலைஞர் திடலில் நடைபெற்று வருகிறது. வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 29 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று உரையாற்றுகிறார்.